அங்குலானையில் பதட்டநிலை; பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்!

அங்குலானையில் பதட்டநிலை; பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்!

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் அங்குலான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளர்கள் இருவர் இன்று (16) காலை 5 மணியளவில் பொலிஸ் அதிகாரிகள் சிலரினால் ஜீப் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையத்தின் முன்னால் பிரதேசவாசிகள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post