
பொலன்னறுவையில் இன்று (18) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது.
இரண்டாவது அலை ஆகஸ்ட் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ இலங்கையைத் தாக்க கூடும்.
இலங்கையில் PCR சோதனையை அதிகரிக்கத் தவறியமையே இரண்டாவது அலைக்கு வழி வகுத்துள்ளது." என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.