அகில இலங்கை YMMA பேரவையின் புதுத்தலைவர் தெரிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அகில இலங்கை YMMA பேரவையின் புதுத்தலைவர் தெரிவு!

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் 70ஆவது வருடாந்த பொதுக் கூட்டம்  கொழும்பு - 07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கேட்போர் கூடத்தில் இன்று (18) நடைபெற்றது.

அகில இலங்கை YMMA பேரவையின் தேசியத் தலைவர் எம்.எம். அப்துல் வஹாப் சுகயீனமுற்ற நிலையில் பதில் தலைவர்/உபதலைவர் சஹீத் எம். ரிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை YMMA பேரவையின் முன்னாள் தேசியத்தலைவர் தொழிலதிபர் தேசபந்து மெக்கி  ஹஷீம் விசேட அதிதியாக கலந்து கொண்டதுடன், புத்திஜீவிகள் அகில இலங்கை YMMA பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நாடு பூராகவும் இருந்து தெறிவு செய்யப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட YMMA கிளைகளின் பிரதிநிதிகள் மாவட்ட பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை YMMA பேரவையின் 2020- 2021 ஆம் வருடங்களுக்கான நிருவாகத் தெரிவு வேற்புமனு தாக்கள் செய்தவர்களிலிருந்து பெப்ரல் உபதலைவர் உள்ளடங்கிய மூவர் கொண்ட தேர்தல் குழு தலைமையில் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு இடம்பெற்றதுடன் போட்டியின்றி தேசியத்தலைவராக கண்டி, மடவளையை சேர்ந்த தேசபந்து, தேசமான்ய சஹீத் எம். ரிஸ்மி தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனைய பதவிகளுக்கான தேர்தலில் தேசிய பொதுச்செயலாளராக சட்டத்தரனி சாபிர் சவாத் தேசிய பொதுப்பொருலாளராக பதுளை YMMA தலைவர் இஹ்சான் ஹமீதும் தெறிவு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக அகில இலங்கை YMMA பேரவையினால் வழமை போன்று  நடாத்தப்பட்டு வந்த வருடாந்த மாநாடும் வை அங்கத்துவ YMMA உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் இரு மத்திய குழுக்கூட்டமும் இம்முறை அசாதாரண சூழ்நிலை காரணமாக நடைபெறவில்லை அத்துடன் வருடாந்த விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த YMMA ஆக பதுளை YMMA தெறிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.