பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்பான கல்வி அமைச்சின் விஷேட அறிவித்தல்!

பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்பான கல்வி அமைச்சின் விஷேட அறிவித்தல்!

நாட்டின் நிலைமை மோசமாகும் பட்சத்தில் மாத்திரமே அனைத்து பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று (12) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தொடர்பான சுகாதார நிலைமையை உறுதிப்படுத்தும் விதமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் கல்வி அமைச்சு தீவிர அவதானத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கல்வி கற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தற்போதைய நிலைமை மேலும் மோசமடைந்தால் பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post