சற்றுமுன் ரணிலின் இல்லத்தில் இருந்து வெளியேறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர்!

சற்றுமுன் ரணிலின் இல்லத்தில் இருந்து வெளியேறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர்!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்துக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காகச் சென்ற நிலையில் தற்போது அவர்கள் வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரணில் விக்ரமசிங்கவிடம் 4 மணிநேரங்கள் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் அவர்கள் வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை பெறவே, குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் அங்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்ளுமாறு, சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post