ராஜாங்கனையில் பயணத்தடை முற்றாக நீக்கம்!!

ராஜாங்கனையில் பயணத்தடை முற்றாக நீக்கம்!!

கொரோனா தொற்று இனங்காணப்பட்டதை அடுத்து ராஜாங்கனை பகுதியில் விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடுகள் இன்று (31) தொடக்கம் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

ராஜாங்கனை சுகாதார வைத்திய அலுவலர் பிரிவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடுகளை கடந்த 27 ஆம் திகதி தொடக்கம் இரண்டு கட்டங்களின் கீழ் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் இருந்து பல புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டமையினால் ராஜாங்கனை பகுதிக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

எனினும் கடந்த 19ஆம் திகதி முதல் இதுவரை இந்த பிரதேசங்களில் எந்தவொரு தொற்று நோயாளரும் இணங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ராஜாங்கனை பிரதேசத்தில் கொரோனா தொற்று பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை கருத்திற் கொண்டே சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக பயணக்கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post