கத்தார், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் சிறையில் இருக்கும் இலங்கை கைதிகளை விடுவிக்க முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்தார், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் சிறையில் இருக்கும் இலங்கை கைதிகளை விடுவிக்க முடிவு!

மத்திய கிழக்கு நாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள சுமார் 1,500 இற்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்வதற்கு அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் தீர்மானித்துள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையர்களும் சிறைத்தண்டனை அனுபவித்துவருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சிறைத்தண்டனை அனுபவித்து வருவோரை விரைவில் விடுவித்து சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்ப மத்திய கிழக்கு நாடுகளினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு முன்னர், அவர்களுக்கு இலவசமாக PCR பரிசோதனை மற்றும் விமான பயண டிக்கெட் என்பனவற்றை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

பரிசோதனைகளின் போது கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்படாதவர்களை மாத்திரம் நாட்டுக்கு திருப்பியனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக மத்திய கிழக்கு நாடுகளினால் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.