தாக்கப்பட்ட ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரிய நியோமால் ரங்கஜீவ!!

தாக்கப்பட்ட ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரிய நியோமால் ரங்கஜீவ!!

புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்தனவிடம் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ மன்னிப்பு கோரியுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் (10) வழக்கு ஒன்று தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தன போதைவஸ்து தடுப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவவினால் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தன்னால் குறித்த ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post