வேலை கிடைக்காத விரக்தியில் போலி வங்கிக் கிளை திறந்தவர் கைது!!

வேலை கிடைக்காத விரக்தியில் போலி வங்கிக் கிளை திறந்தவர் கைது!!

இந்தியாவில் 'பாரத ஸ்டேட் பேங்க்' (Baratha State Bank) பெயரில் போலி வங்கி கிளை நடத்தியதாக ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் மகன் உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி எனும் பகுதியில் சேர்ந்த சையது கலீல் மற்றும் லட்சுமி. முன்னாள் வங்கி ஊழியர்களான அவர்களுக்கு மகனான
கமால் பாபு என்பவறே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

கலீல், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார், லட்சுமி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். வேலையில்லாமல் விரக்தியின் உச்சத்தில்
இருந்த கமால் பாபு, பாரத ஸ்டேட் வங்கி- நார்த் பஜார் என்ற பெயரில் போலி வங்கிக் கிளையை நடத்தி வந்துள்ளார். மேலும், அந்த வங்கிக்கு தானே மேலாளர் எனவும் கூறி வந்துள்ளார்.

ஏற்கனவே, அப்பகுதியில்  பாரத ஸ்டேட் பேங்க்கின் இரண்டு கிளைகள் இருந்ததை அடுத்து, மூன்றாவதாக கிளை திறக்கப்பட்டுள்ளதா என வாடிக்கையாளர் ஒருவர் அந்த வங்கியின் கிளை மேலாளரிடம் வினவியுள்ளார். அதனை அடுத்து, போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்த கிளை மேலாளர், கமால் பாபு நடத்திவந்துள்ள வங்கி கிளைக்கு சென்றுள்ளார். 

அப்போது, பாரத ஸ்டேட் பேங்க்கின் பெயரிலேயே போலியாக செலான், காசோலை, முத்திரைகள், ஆவணங்கள் உள்ளிட்டவை இருந்ததை அவதானித்துள்ளனர்.

மேலும், பாரத ஸ்டேட் பாங்கு – நார்த் பஜார் என்ற பெயரில் போலி இணையப்பக்கம் உருவாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

அதனை அடுத்து, கமால் பாபு, அவருக்கு உதவிய ஈஸ்வரி, ரப்பர் ஸ்டேம்ப் உரிமையாளர் மாணிக்கம், அருணா பிரிண்டர்ஸ் உரிமையாளர் குமார் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதான மூன்று பேர் மீது மோசடி, கள்ள முத்திரை உருவாக்குதல், நற்பெயருக்கு தீங்கு விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பண்ருட்டி போலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சுமார் 3 மாத காலம் அந்த வங்கிக் கிளையை செயல்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post