5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை வினாத்தாளில் ஏற்பட்ட புதிய மாற்றம்!

5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை வினாத்தாளில் ஏற்பட்ட புதிய மாற்றம்!

எதிர்வரும் புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்களின் கால எல்லையை 15 நிமிடங்களால் நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது,

அதன்படி, இதுவரை வழங்கப்பட் 45 நிமிட காலம் ஒரு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று (29) கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும இதனைத் தெரிவித்திருந்தார்.

$ads={1}

இவ் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் அக்டோபர் 11 ஆம் திகதி  நடைபெற உள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கும் மேலாக பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டமையைக் கருத்திற்கொண்டு நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, இரண்டாவது வினாத்தாளில் உள்ள 4 தெரிவுகளைக் கொண்ட கேள்விகளில் இம்முறை 3 தெரிவுளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

$ads={2}
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post