கிரிக்கெட் வீரர் குசால் மென்டிஸ் கைது!!

கிரிக்கெட் வீரர் குசால் மென்டிஸ் கைது!!

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான குசால் மென்டிஸ் இன்று (05) அதிகாலை இடப்பெற்ற வாகன விபத்தின் விளைவாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பாணந்துறை, ஹொறேதுடுவ எனும் பகுதியில் வைத்து குசால் மென்டிஸ் செலுத்திச் சென்ற கார் ஒருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

பலியானவர் 65 வயதான அப்பகுதியை சேர்ந்த ஒருவர் என இனம்காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக குசால் மென்டிஸை கைது செய்து போலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post