அண்மையில் இலங்கை வந்தோர் மீண்டும் விமான நிலையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர் !!!

அண்மையில் இலங்கை வந்தோர் மீண்டும் விமான நிலையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர் !!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கைக்கு வந்துவுடன் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்ட பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை தினம் முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.


மார்ச் மாதம் 9ஆம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் நாட்டிற்கு வந்த விமான பயணிகளுக்கு தீர்வையற்ற பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்காக நாளை முதல் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை விமான நிலையத்திற்கு வருகைத்தர வேண்டும்.

இது தொடர்பில் மேலதிக தகவல் பெற 0112263017 என்ற இலக்கத்தில் அழைப்பேற்படுத்தி தகவல் பெற முடியும் என விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post