கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிடச்சென்ற அவர்களது 116 உறவினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 441 பேரை தனிமைப்படுத்த இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்களில் 328 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் இன்றுக்குள் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.