புதிய மையங்கள் நிறுவ ஏற்பாடு; வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்களுக்கு தற்காலிக தடை!

புதிய மையங்கள் நிறுவ ஏற்பாடு; வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்களுக்கு தற்காலிக தடை!

வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை ஜூலை 14 முதல் தற்காலிகமாக நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது.

கந்தக்காடு மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்டுள்ள தீவிர பரவல் காரணமாக இந்த செயல்முறை தற்காலிகமாக நிறுத்தப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் அட்மிரல் ஜயந்த கொலம்பகே தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்டுப்பாட்டை மீறி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ​​மக்களை தனிமைப்படுத்த அரசாங்கத்திற்கு போதுமான தனிமைப்படுத்தல் மையங்கள் தற்சமயம் இல்லை.

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்படும் இலங்கையர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதற்கான தனிமைப்படுத்தல் மையங்களில் நிறுவப்பட வேண்டும்.

அதனடிப்படையில், எதிர்வரும் ஜூலை 14 முதல்நாட்டிற்கு அழைத்து வரும் பணிகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜூலை 14 ஆம் தேதி வரை திருப்பி அனுப்பப்பட வேண்டியவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், 65 நாடுகளைச் சேர்ந்த 16, 000 பேர் திரும்பி வருவார்கள் என்று அவர் கூறினார்.

மேலும் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, கடைசி இரண்டு விமானங்கள் மாலத்தீவு மற்றும் ஜோர்தானில் இருந்து அழைத்துவரப்படவுள்ளது. இதில் 500 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் திரும்ப உள்ளனர் என அவர் மேலும் கூறினார்.

இதற்கமைய புதிய தனிமைப்படுத்தல் மையங்களை நிறுவி அது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சுகாதார அதிகாரிகள் மற்றும் இராணுவத்திற்கு ஜூலை 14 முதல் 3 முதல் 4 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post