'உலகக் கிண்ண 2020 கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்படவுள்ளன!

'உலகக் கிண்ண 2020 கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்படவுள்ளன!

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற திட்டமிட்டிருந்த சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ICC) இருபதுக்கு இருபது உலகக் கிண்ண 2020 போட்டிகள் பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை சர்வதேச கிரிக்கட் சபை அதிகாரிகள் கூடும் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் IPL போட்டிகளை இந்த வருடத்தில் நடத்துவதற்கான வாய்ப்பு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

எப்படியிருப்பினும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பாரிய அளவில் பரவி வருவதன் காரணமாக பலகோடி டொலர் பெறுமதியான லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது ஏற்புடையது இல்லை என பிரபல விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post