புலி உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்! -ஹிருணிகா

புலி உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்! -ஹிருணிகா

hirunika premachandra
எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் பலர் சிறைச்சாலைக்குள் உள்ளனர் என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “இன்று சிறைச்சாலைகளில் புலிகளின் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் பலர் இருக்கிறார்கள். இவர்களின் சிலருக்கு வழக்கு கூட இன்னும் தொடரப்படவில்லை.

அதேபோல், இராணுவத்தினரும் நீண்ட காலமாக சிறைகளில் இருக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலைமை. இந்த நிலையில், கருணா தொடர்பாக அனைவரும் கருத்து வெளியிடுகிறார்கள். கருணாவை நாம் விமர்சித்தபோது, எம் மீது குற்றம் சாட்டினார்கள்.

இன்று கருணா, ராஜபக்ஷவினருக்கு சிறந்த ஒரு நபராகவே காணப்படுகிறார். இதனால் தான் கருணாவின் கருத்தை மூடி மறைக்க இவர்கள் முற்படுகிறார்கள்.” என தெரிவித்திருந்தார்.

Previous Post Next Post