இன்று 06 பேர் இனம்காணப்பட்டதுடன் 37 பேர் பூரண குணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,053 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் (01) மாத்திரம் புதிதாக 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் நான்கு பேர் பங்களாதேஷியில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் ஒருவர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பியவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை இன்று 37 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 1,748 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி தற்போது தொற்று உறுதியானவர்களில் 294 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை 55 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் சிகிச்சை பெற்றுவருவதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post