கடந்த மாதங்களுக்கான மின்சாரப் பட்டியலுக்கு நிவாரணம்?

கடந்த மாதங்களுக்கான மின்சாரப் பட்டியலுக்கு நிவாரணம்?

இலங்கையில் கொறோனா வைரஸை தொடர்ந்து அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக எழுந்துள்ள மின்சார பட்டியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு கலந்துரையாடி நிவாரணம் வழங்குவதற்கான யோசனையை முன்வைப்பதற்காக 04 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு வழங்கப்பட்ட மின்சார பட்டியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் பல்வேறு முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பாக ஆராயும் குழுவொன்றை நியமிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம், ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.


மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த சமரகோன், இக்குழுவுக்கு தலைமை தாங்குகின்றார் என்பதோடு, இக்குழுவில், இலங்கை  மின்சார சபையின் பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மூவர் அடங்குகின்றனர்.

விடயம் தொடர்பில் ஆராய்ந்து  எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குறித்த குழுவுக்கு, அமைச்சின் செயலாளர் பணித்துள்ளார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post