கொழும்பு, கண்டி உட்பட பல மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை!

கொழும்பு, கண்டி உட்பட பல மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை!

நாட்டில் கடந்த நாட்களாக தொடரும் மழையுடனான வானிலைக் காரணமாக பல மாவட்டங்களுக்கு டெங்கு  அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு, கண்டி, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிளுக்கே இவ்வாறு டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகராட்சியில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50 சதவீத டெங்க கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு உகந்த களமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நிலவும் மழையுடான வானிலை தொடர்ந்தால், டெங்கு கொசுக்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தற்போதைய நிலைமை மோசமாகவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post