எதிர்வரும் கெரபியன் பிரீமியர் லீக்கில் (CPL) போட்டித் தொடரில் விளையாடுவதற்கு சில இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு இலங்கைகிரிக்கெட் வாரிய்ம் (SLC) ஆட்சேபனை சான்றிதழ்களை (NOC) வழங்க மறுத்துவிட்டது.
இலங்கை கிரிக்கெட் வாரிய அறிக்கையின் படி, தசுன் ஷானக, அவிஷ்க பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க மற்றும் பானுகா ராஜபக்ஷஆகியோர் CPL போட்டிகளுக்கான ஆட்சேபனை சான்றிதழ்களை கோரிய வீரர்கள் ஆகும்.
$ads={1}
CPL போட்டிகளுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், அடுத்த மாதம் தொடங்கும்போட்டிகளில் இருந்து பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் விலகியுள்ளதால் மாற்றாக CPL அணிகளின் உரிமையாளர்கள் இலங்கைவீரர்களை அணுகியுள்ளனர்.
லங்கா பிரீமியர் லீக் (SLPL) டி20 போட்டித் தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதனாலேயே வீரர்களுக்கானஆட்சேபனை சான்றிதழ்களை வழங்கவில்லை என இலங்கை கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது.