இன்று 22 பேர் குணமடைந்த நிலையில், மேலும் 05 பேர் தொற்றுக்கு இனம்காணப்பட்டுள்ளனர்.

இன்று 22 பேர் குணமடைந்த நிலையில், மேலும் 05 பேர் தொற்றுக்கு இனம்காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு மேலும் 22 பேர் குணமடைந்துள்ளனர். இதில் குணமடைந்தவர்களில் கடற்படையினர் 02 பேர் உள்ளடங்குகின்றனர்.

பங்களாதேஷில் இருந்து வந்த ஒருவர், கட்டாரிலிருந்து வந்த 02 பேர், மடகஸ்காரிலிருந்து வந்த ஒருவர், அமெரிக்காவிலிருந்து வந்த ஒருவர் ஆகிய 05 பேரே இன்று இதுவரை இவ்வாறு அடையாளம் காணப்பட்டனர்.

இன்று (04) இரவு 7.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,074 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,885 ஆக அதிகரித்துள்ளது..

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 2,074 பேரில் தற்போது 178 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, இது வரை 1,885 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 46 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post