நாளை முதல் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாளை முதல் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாளை (06) திங்கட்கிழமை முதல் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கின்றன. நான்கு கட்டங்களாக பாடசாலைகளை இயங்க வைக்கும் அரசின் திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டத்தின் கீழ் தரம் 05, 11, 13 மாணவர்கள் நாளை திங்கட்கிழமை பாடசாலைகளுக்குச் சமூகமளிக்க வேண்டும்.

02ஆம் கட்டத்தின் கீழ் மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள், எதிர்வரும் 17ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

01ஆம் கட்டத்தின் கீழ், அனைத்து அரசாங்க பாடசாலைகளும் கடந்த 29ஆம் திகதி திறக்கப்பட்டன.

ஜனாதிபதி செயலணிக் குழு அதிகாரிகள், அமைச்சரவை அமைச்சர்கள், உயர் கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு அதிகாரிகள், ஜனாதிபதி, கல்வி அமைச்சு ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடாலை தொடர்ந்து, சுமார் 3 மாதங்களின் பின் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இது தொடர்பான சுற்றறிக்கை தரம் 5, 11, 13 மாணவர்களைக் கோரும் வகையில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

03ஆம் கட்டத்தின் கீழ் தரம் 10, 12 மாணவர்களுக்கு ஜூலை 20ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்தோடு, இது ஜூலை 24ஆம் திகதி வரை பாடசாலை இடம்பெறும்.

04ஆம் கட்டத்தின் கீழ் தரம் 03, 04, 06, 07, 08, 09 மாணவர்களுக்கு ஜூலை 27ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாட்டிலுள்ளஅனைத்துபாடசாலைகளினதும்தரம் 01, 02, முன்பள்ளிகளை எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் மீள திறப்பதற்கு, கல்விஅமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன், கடந்த மார்ச்16 முதல் மூடப்பட்ட அனைத்து கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகளையும் ஜூலை 07ஆம் திகதி ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.