சீன ஜனாதிபதியின் முகத்திற்கு ஒப்பான சீன பாடகர் - பாடகருக்கு நேர்ந்த கதி!!

சீன ஒப்பேரா பாடகர் ஒருவர் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக சென்சார் செய்யப்பட்டு வருகிறார்.

அதற்கு காரணம் வேறொன்றுமில்லை, அவரது முக அமைப்புதான்! ஒப்பேரா பாடகரான Liu Keqing (63), சீன டிக் டாக்கில் அவரது கணக்கு, அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதை அறிந்துகொண்டார். பின்னர் அதற்கான காரணம் அவருக்கு தெரியவந்துள்ளது.


அவரது முகம் கிட்டத்தட்ட சீன அதிபர் Xi Jinpingஇன் முகத்தைப் போலிருப்பதுதான் அதற்குக் காரணம்.

பெர்லினில் வாழும் Liu Keqingஐ 41,000 பேர் பின்தொடர்கிறார்கள். அவரது கணக்கில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களைப் பார்த்தால், சீன அதிபர் பாடுவதைப்போலவே உள்ளது.

எனவேதான் அவரது கணக்கு டிக் டாக்கில் தடை செய்யப்பட்டுள்ளது.சீன அதிபரைப்போலிருக்கும் முதல் நபரல்ல Liu Keqing, சீனாவில் சிறிய உணவகம் நடத்தி வரும் மற்றொருவரும் சீன அதிபரைப் போலவே இருப்பதால் சென்ற ஆண்டு இணையத்தில் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post