இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2011 உலகக் கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியின் போதுஇடம்பெற்றதாக கூறப்பட்ட ஊழல் தொடர்பான விசாரணை ஒன்றிற்காக முன்னாள் இலங்கை கிரிக்கட் அணித் தலைவர் குமார்சங்கக்கார விளையாட்டுத்துறை அமைச்சின் சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார்.
நாளை குமார் சங்கக்கார குற்றப்புலனாய்வு பிரிவிற்கு ஆஜராகவுள்ளார். மேலும் 2011 கிரிக்கட் உலகக் கிண்ண அணியிலிருந்த உபுல்தரங்க சற்று முன் அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.