மஹிந்தானந்தவின் மூளையற்ற அரசியல் உடனே நிறுத்தப்படல் வேண்டும் - ஹரீன்

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே வெளியிட்ட உண்மையற்ற தகவலை மையப்படுத்தி கிரிக்கட் வீரர்கள் விசாரணை செய்யப்படுவதை விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கண்டித்துள்ளார்.


இந்த மூளையற்ற செயல் நிறுத்தப்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை திசைதிருப்பும் வகையில் வெளியிடப்பட்டுள்ள உண்மையற்ற தகவல் தொடர்பில் கிரிக்கட் வீரர்களிடம் விசாரணை நடத்துவது வெட்கக்கேடான செயல் என்றும் ஹரின் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலை ஒருபுறம் வைத்துவிட்டு பார்க்கும்போது கிரிக்கட் வீரர்களை பரிகசிக்கும் இந்த நாடகத்துக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்கவேண்டும் என்றும் ஹரின் பெர்ணான்டோ கோரியுள்ளார்.
Previous Post Next Post