
காலி பூஸ்ஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக உறுப்பினரான கொஸ்கொட தாரக என்ற தாரக பெரேரா வெளியிட்ட தகவலின் அடிப்படையிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தமது சிறையறைக்கும் வந்த சிறையதிகாரிகள் சிலர் தம்மை பயமுறுத்தியபோது ஜனாதிபதியையும் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்யமுடியும் என்று கூறியதாக கொஸ்கொட தாரக ஏற்கனவே சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் முறையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்
விசாரணைகளின் அடிப்படையில் அடையாளம் காணப்படுபவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

