கொழும்பில் கொரோனா தொற்றுடன் வகுப்பிற்கு சென்ற மாணவன் - பலர் அபாயத்தில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் கொரோனா தொற்றுடன் வகுப்பிற்கு சென்ற மாணவன் - பலர் அபாயத்தில்!

கொழும்பின் புறநகர் பகுதியான கஹதுடுவ பிரதேசத்தில் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் உட்பட 65 மாணவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கஹதுடுவ பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவன் ஒருவர் மேலதிக வகுப்பிற்கு வருகைத்தந்ததாக தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்தே இந்த PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேர் ஹோமாகம பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கி செயற்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் சிறு பிள்ளைகள் இருவரும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.