ரதண தேரர் உலமா சபைக்கு வழங்கிய ஒரு வார கால அவகாசம், தேர்தல் முடியும் வரை நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரதண தேரர் உலமா சபைக்கு வழங்கிய ஒரு வார கால அவகாசம், தேர்தல் முடியும் வரை நீடிப்பு!

புர்கா மற்றும் மத்ரஸாக்களை ஒரு வார காலத்துக்குல் நீக்குமாறு கோரி முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதண தேரர் அகில இலங்கை ஜமிஅத்துல் உலமாவுக்கு எச்சரித்திருந்தார்.

குறித்த ஒரு வார காலத்தினுல் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் உலமா சபைக்கு எதிராக தேரர்கள் உட்பட நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் அணிதிரட்டத் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

மேலும், ஒரு வார காலத்தினுல் உலமா சபை இதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில் நாட்டில் அனைத்து முஸ்லிம் வர்த்தக நிலையங்களையும் புறக்கணிக்க மக்களை வழிநடத்துவதாகவும் ரதண தேரர் அச்சுறுத்தினார். 

இருப்பினும், ஒரு வாரம் என கூறி இரண்டு வாரங்கள் கடந்து விட்ட நிலையில், இதுவரை முஸ்லிம் கடைகள் எதுவும் புறக்கனிக்கப்படவில்லை.

இதற்கிடையில், தனது அபே ஜனபல கட்சியின் பிரச்சார கூட்டம் ஒன்றில் கடந்த திங்கள் (20) அன்று உறையாற்றிய ரதண தேரர், புர்கா மற்றும் மதரஸா பள்ளிகளை தடை செய்ய பொதுத் தேர்தல் வரை உலமா சபைக்கு கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.