கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழருக்கு - பிரதமர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழருக்கு - பிரதமர்

பொதுத்தேர்தலின் பின்னர் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தமிழர் ஒருவருக்கு வழங்குவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கு என்ன தேவை என பிரதமர் தன்னிடம் கேட்டதாகவும், அதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தமிழர் ஒருவருக்கு வழங்குமாறு கோரியதாகவும் பிரதமர் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தார் எனவும் கருணா கூறியுள்ளார்.


பிரதமர் மகிந்த ராஜபக்ச வழங்கும் வாக்குறுதிகளை கூறியபடி நிறைவேற்றுபவர் என கூறியுள்ள கருணா, இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை தன்னிடம் கேட்டறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருணா எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post