சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது!

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது!

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவில் மண் ஏற்றுவதற்காக அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்ட அறிவுறுத்தல்களை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்துடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள இலுப்படிச்சேனை - காலபோட்டமடு பிரதேசத்தை அண்டிய பகுதியில் வவுணதீவு பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் சஜித் ரத்னாயக்க தலைமையிலான பொலிஸாரினால் இந்த நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்தையும் சந்தேக நபரையும் சட்ட நடவடிக்கையின் பொருட்டு இன்று (07) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிககைகளை மேற்கொண்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் சஜித் ரத்னாயக்க தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post