84 வயது ஆசிரியையிடமிருந்து 2 இலட்சம் நிதியுதவி!

84 வயது ஆசிரியையிடமிருந்து 2 இலட்சம் நிதியுதவி!

“சட்டம், நீதி, தர்மத்தை பாதுகாக்கின்ற அரசாங்கம்; தன்னிறைவடைந்த நாடொன்றை எமக்கு கையளியுங்கள்” 

என வேண்டுகோள்புத்தளம், காக்கா பள்ளி, மனங்குளத்தில் வசிக்கும் 84 வயதான திருமதி எம்.ஏ.எச்.பி. மாரசிங்க ஓய்வுபெற்ற ஆசிரியை இரண்டு இலட்சம் ரூபாய்களை கொவிட் நிதியத்திற்கு ஜனாதிபதியிடம் கையளித்தார்.


பொதுஜன முன்னணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று (06) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்து, மாதம்பை தனிவெல்லே பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த அன்பளிப்பு கையளிக்கப்பட்டது.

அந்த ஆசிரியை ஐயாயிரம் ரூபாய் நோட்டுகளை ஒன்று சேர்த்து வழங்கிய இரண்டு இலட்சம் ரூபாவை சுற்றிய கடதாசியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.


கொவிட் 19 சமூக பாதுகாப்பு ஜனாதிபதி நிதியம்
அன்பளிப்பு வழங்குகிறேன்
ரூபா இரண்டு இலட்சம்
ஜனாதிபதி அவர்களே,
“சட்டம், நீதி, தர்மத்தை பாதுகாக்கின்ற அரசாங்கம்; தன்னிறைவடைந்த நாடொன்றை எமக்கு கையளியுங்கள்”
M.A.H.P. மாரசிங்க
ஓய்வு பெற்ற ஆசிரியை (வயது 84)
"சுதர்மா"
மனங்குளம்
காக்கா பள்ளி

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post