பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிவதற்கான தொலைப்பேசி செயலி (App) அறிமுகம்

பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிவதற்கான தொலைப்பேசி செயலி (App) அறிமுகம்

பயணிகள் பஸ் போக்குவரத்து தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக பஸ்களில் கால அட்டவணையை கண்காணிக்கக் கூடியவகையில் தொலைப்பேசி பயன்பாட்டை இன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

MYBUS.SL எனும் பெயரில் குறித்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ள தாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், கமாண்டர் நிலான் மிரண் டா தெரிவித் துள்ளார்.

இதன் ஊடாக பொது போக்குவரத்து சேவை பயணிகள் தாமதமின்றி பெற முடியும்.


பயண தூரம், பஸ் கட்டணம் ஆகியவற்றை இதன்மூலம் அறிந்துகொள்ள முடியும் எனவும் GPS தொழில்நுட்பத்தினூடாக பஸ் பயணிக்கும் பகுதியை அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் MYBUS.SL செயலி மூலம் பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் பஸ்களில் முற்பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் இணையதளம் ஊடாக பணம் செலுத்த முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கமாண்டர் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post