கொரோனா பரவல் இரண்டாம் கட்டம் விரைவில் - ஐரோப்பா எச்சரிக்கை

கொரோனா பரவல் இரண்டாம் கட்டம் விரைவில் - ஐரோப்பா எச்சரிக்கை

கொரோனா பரவல் இரண்டாம் கட்டமாக உருவெடுக்கலாம் என்று ஐரோப்பா எச்சரித்துள்ளது.

அந்தக் கண்டத்தின் சில பகுதிகளில் நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

ஜெர்மனியும், பிரிட்டனும் ஐரோப்பாவின் பெரிய பொருளியல்களைக் கொண்ட நாடுகள். கிருமிப்பரவல் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக அவ்விரண்டு நாடுகளும் தெரிவித்துள்ளன.

ஸ்பெயினிலிருந்து வருவோரைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற பிரிட்டனின் முடிவைப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்காத்துப் பேசியுள்ளார்.

ஜெர்மனியிலும் நிலைமை சீராக இல்லை. மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதால், கிருமிப் பரவல் அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் கவலைப்படுகின்றனர்.

புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளாகாமல் தடுப்பதற்கு பெர்லின் (Berlin) தீவிரமாக முயன்று வருகிறது.

ஸ்பெயினின் சில பகுதிகளுக்குச் செல்வதன் தொடர்பில் பயண ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் புதிதாக 900க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post