சில பாடசாலைகளை தொடர்ந்தும் மூடி வைக்குமாறு வேண்டுகோள்!

சில பாடசாலைகளை தொடர்ந்தும் மூடி வைக்குமாறு வேண்டுகோள்!

ஜிந்துப் பிட்டி மற்றும் அதனை அண்டிய 11 பாடசாலைகளை தொடர்ந்தும் மூடி வைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று கோவிட்19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி ஒருவர் கண்டறியப்பட்டதுடன் அவருடன் தொடர்பான 150 க்கும் அதிகமானோர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.


எனவே, பிரதேசத்தின் பாடசாலைகளை தொடர்ந்தும் மூடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous Post Next Post