விசாரணையை புறக்கணிக்க நாங்கள் தவறு செய்யவில்லை எங்களை பற்றி பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்! மஹேல தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விசாரணையை புறக்கணிக்க நாங்கள் தவறு செய்யவில்லை எங்களை பற்றி பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்! மஹேல தெரிவிப்பு!

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய மோசடி இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அண்மையில் முன்வைத்த கருத்திற்கு அமைய  வாக்குமூலம் வழங்க இன்று (03) வருகை தர வேண்டாம் என விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவிற்கு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மஹேல இன்று காலை விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவிற்கு  வருகை தந்திருந்தார். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹேல குறித்த விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் தருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த மஹேல "நான் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிப்பவன். எனவே விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவினருக்கு தேவையான தகவல்களை வழங்குவது எனது பொறுப்பாகும்.

நேற்று (02) இரவு 11.30 மணியளவில் இன்றைய தினம் விசாரணை பிரிவில் ஆஜராக வேண்டாம் என எனக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நான் தனிப்பட்ட காரணங்களால் விசாரணை பிரிவில் ஆஜராக மறுத்ததாக இன்று காலை சில ஊடகங்கள் அறிவித்திருந்தது. அதை நான் அவதானித்ததேன். இதன் காரணமாகவே நான் இன்று விசாரணை பிரிவில் ஆஜராகினேன்." என குறிப்பிட்டிருந்தார்.

ஆட்ட நிர்ணய மோசடி குறித்த விசாரணை பிரிவில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, முன்னாள் தெரிவுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார மற்றும் உபுல் தரங்க ஆகியோர்  வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.