சம்பத் வங்கி சிங்கள பௌத்தர்களுக்கானது மட்டுமே!

சம்பத் வங்கி சிங்கள பௌத்தர்களுக்கானது மட்டுமே!

தெஹிவலையில் உள்ள சம்பத் வங்கி கிளைக்குள் நுழைய முஸ்லிம் பெண் ஒருவரை தலை மறைப்பை நீக்கிவிட்டு உள்ளே வரும்பபடி கூறிய வீடியோ ஒன்று நேற்று (02) சமூக வலைதளங்களில் வைறலாகியது.

குறித்த அந்த வீடியோவில், ஒரு முஸ்லீம் பெண் தலையை மறைத்து அணிந்து (முஸ்லிம் பெண்களின் பாரம்பரிய உடை) வங்கியில் நுழையத் தயாராகும் போது தனது தலை மறைப்பை அகற்றிவிட்டு உள்ளே நுழையுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் அங்கு குறித்த பெண்ணால் மறுக்கப்பட்டு, அவரது கணவரால் நியாயம் கோரி அமைதியற்ற நிலை ஏற்பட்டதை அடுத்து, வங்கி உள்ளே தலை மறைக்கப்பட்ட நிலையில் அனுமத்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த இந்த காணொலி சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.


இதற்கிடையில், சம்பத் வங்கியுடன் நெருங்கிய வணிக உறவு கொண்ட வாடிக்கையாளரும் தீவிர ராஜபக்ஷ ரசிகருமான ஒரு முக்கிய தொழிலதிபரான நிமல் பெரேரா எனும் நபர் தனது ட்விட்டர்  கணக்கில் சம்பத் வங்கியில் சேவை பௌத்த சிங்கள மக்களுக்கு மாத்திரம் 
சேவையை வழங்க அமைக்கப்பட்ட வங்கி என கூறியுள்ளார். இருந்த போதிலும் அவர்களை ஒரு இனவாதியாக கருத வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேசமயம், முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர இந்த ட்வீட்க்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு ட்வீட்டினை பதிவிட்டிறுந்தார்.

அதில், “சம்பத் வங்கி அனைத்து இலங்கையர்களுக்கும் இல்லை என்பதை எனக்குத் தெரிவித்த நிமல் பெரேராவுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். 
சம்பத் வங்கியுடன் தொடர்புபட்ட எனது 
கணக்கை இனம், மதம் வேறுபாடு பாராத வங்கி ஒன்றுக்கு மாற்ற எனது அலுவலகத்திற்கு பரிந்துரைத்துள்ளேன்.

இது உங்கள் வங்கிக்கு ஒரு பெரிய இழப்பாக இருக்காது, ஆனால் இது எனக்கு முக்கியமான ஒன்று" என தெரிவித்திருந்தார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post