ஊடகவியலாளரை இழுத்துச் சென்று தாக்கிய நியோமல் ரங்கஜீவ!!

ஊடகவியலாளரை இழுத்துச் சென்று தாக்கிய நியோமல் ரங்கஜீவ!!

வெலிகட சிறைக்கைதி கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளியான பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ தன்னிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தான் வழக்கு விசாரணை ஒன்று தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சென்றதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த தன்னை முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ பலவந்தமாக நீதிமன்ற பொலிஸ் முகாமிற்கு இழுத்துச் சென்று தாக்குதல் மேற்கொண்டதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Adaderana

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post