
பொதுஜனபெரமுனவுக்கு எதிராhன தேர்தல் வன்முறை முறைப்பாடுகளே அதிகளவில் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிபபதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
21ம் திகதி வரையிலான தேர்தல் வன்முறைகள் குறித்த அறிக்கையை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக 109 முறைப்பாடுகளும் ஐக்கியதேசிய சக்திக்கு எதிராக 43 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக 23முறைப்பாடுகளும் ஈபிடிக்கு எதிராக 13 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சட்டவிரோத பிரச்சாரம் தொடர்பில் 215 முறைப்பாடுகளும் சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் தொடர்பில் 162 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
சுகாதார வழிமுறைகள் மீறல்கள் தொடர்பில் 64 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.


