பால் பவுசர் தடம்புரண்டு விபத்து ; சாரதி படுகாயம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பால் பவுசர் தடம்புரண்டு விபத்து ; சாரதி படுகாயம்

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் பால் ஏற்றிச்செல்லும் கொள்கலன் ஒன்று இன்றைய தினம் (23) காலை விபத்திற்குள்ளாகியுள்ளது.

மாங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச்சென்ற குறித்த கொள்கலன் கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் கொள்கலனின் சாரதியான கேகாலை பகுதியை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதையடுத்து விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.