
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்நதும் கூறுகையில் ,
தேசிய வளங்கள் மற்றும் புராதன மரபுரிமைகளை பாதுகாக்க வந்த அரசாங்கம் தற்போது தொல்பொருள் சட்டத்திற்கே சவால் விடுத்துள்ளது. 2 ஆம் புவனேகுபாகு மன்னனின் அரசவை மண்டபம் உடைக்கப்பட்டதன் பின்னணியில் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் உள்ளனர் என்பதே உண்மையாகும். அந்த சம்பவத்தையடுத்து தற்போது ஏற்பட்டுள்ள எதிர்பலைகளினால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
2001 ஆம் ஆண்டு 1.6 மேலாண்மை எதிர்மறை எண்ணாக வீழ்ச்சிக் கண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஐக்கிய தேசிய கட்சி 7 வீத வளர்ச்சி புள்ளியை நோக்கி கொண்டுச் சென்றது. தற்போதைய தேசிய பொருளாதாரத்தின் வீழ்ச்சி எதிர்மறை எண்ணாகவே காணப்படுகிறது. ஆனால் அரசாங்கம் உண்மைகளை மறைக்கிறது. தேர்தலின் பின்னர் தற்போதைய அரசாங்கத்தின் இயலாமையும் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தையும் மக்கள் உணரும் நிலை ஏற்படும்.

