இலங்கையில் வெள்ளை மறை மான்! போட்டோ வெளியாகியது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் வெள்ளை மறை மான்! போட்டோ வெளியாகியது!

மத்திய மலையகத்தின் தும்பர பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் அபூர்வ இனமான வெள்ளை மறை மான் ஒன்று சுற்றாடல் ஆர்வலர் ஒருவரின் கண்ணில் சிக்கியுள்ளது.

பல வருடங்களுக்கு முன்னர் பிட்டவலதென்ன என்ற காட்டுப் பகுதியில் வெள்ளை மறை மான் ஒன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் தற்போது அவதானிக்கப்பட்டுள்ள மறை மான் மலையகத்தின் வேறு ஒரு பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

காட்டுப் பகுதியில் ஆராச்சியில் ஈடுபட்டு வரும் நேரத்தில் இந்த வெள்ளை மறை மானை கண்டதாகவும், அதனை புகைப்படம் எடுத்துள்ளதுடன் அது குறித்து தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகவும் சுற்றாடல் ஆய்வாளரான கே.பி.லசித சுரங்க என்பவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.