
உத்தேச மருத்துவ பிரிவை களுத்துறை பொது வைத்தியசாலை அமைக்க எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ஒத்துழைப்பு பயிற்சி நடவடிக்கைகளை ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் களுத்துறை பொது வைத்தியசாலை மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகளை போதனா வைத்தியசாலை என்ற ரீதியில் தரமுயர்த்துவதற்காக சுகாதாரம் மற்றும் சுதேசிய வைத்திய சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

