மகளுடன் தொலைபேசியில் உறையாடிய அங்கொட லொக்கா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மகளுடன் தொலைபேசியில் உறையாடிய அங்கொட லொக்கா!

அங்கொட லொக்கா
கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான அங்கொட லொக்கா என அறியப்படும் மத்துமகே லசந்த சந்தன பெரேரா இரண்டு வாரத்திற்கு முன்னர் தமது மகளுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

அங்கொட லொக்காவின் வீட்டுக்கு இன்றைய தினம் சென்றிருந்த செய்தியாளர் வினவிய போதே அவரது தந்தை இதனை தெரிவித்தார்.

திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான அங்கொட லொக்கா என அறியப்படும் மத்துமகே லசந்த சந்தன பெரேரா கொலை செய்யப்பட்டுள்ளதாக இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தொடர்ந்தும் விடயங்களை ஆராய்ந்து வருவதாக சென்னையில் உள்ள துணை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் அங்கொட லொக்கா கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியிடப்படும் தகவலானது அவர் தனது உருவத்தை மாற்றிக்கொண்டு நாட்டுக்கு வருகை தருவதற்கான முயற்சியா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் பெங்களுரில் வைத்து அங்கொட லொக்காவுக்கு விஷம் செலுத்தப்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல குற்றச் செயல்கள் தொடர்பில் அவருக்கு எதிராக நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் பரவி வருகின்ற நிலையில், அதனை உறுதிப்படுத்தக்கூடிய வகையிலான தகவல்கள் இலங்கை காவல்துறைக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.