பிறப்பு சான்றிதழில் இனம் மதம் உள்ளடக்கப்படல் வேண்டும்! எதிர்ப்பை தெரிவித்துள்ள விமல் வீரவன்ச!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிறப்பு சான்றிதழில் இனம் மதம் உள்ளடக்கப்படல் வேண்டும்! எதிர்ப்பை தெரிவித்துள்ள விமல் வீரவன்ச!

Wimal weerawansa
பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமண விபரங்கள் மற்றும் மத, இனம் தொடர்பான தகவல்களை உள்ளடக்காதிருப்பதற்கு பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்த கருத்தினை அமைச்சர் விமல் வீரவன்ச முற்றாக நிராகரித்துள்ளார்.

அதேவேளை, நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் புதிய பிறப்புச் சான்றிதழ்களில் ‘இலங்கையர்’ என குறிப்பிடப்படும் என பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே தெரிவித்திருந்த போதிலும், இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச கடுவலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களில் இனம், மதம் உள்ளடக்கப்படுவதில்லை என பதிவாளர் நாயகம் கூறியதை கண்டதும் ஆச்சரியமடைந்தேன்.

அதனை கண்டதும் உடனே பிரதமர் குறித்த அமைச்சின் செயலாளருடன் உரையாடி அதனை சரி செய்யுமாறு கூறியிருந்தார்.

இதனை நான் ஜனாதிபதிக்கும் கூறினேன். யாரு என்ன சொன்னாலும் குறித்த பிறப்பு சான்றிதழ் இந்த தலைமையின் கீழ் மாற்றப்படாது.” என தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.