சிறுவர் இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு!!

சிறுவர் இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு!!

வவுனியா, கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளக சிறுவர் இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (05) பாடசாலை ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று இரவு குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

இன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகள் சிறுவர் இல்லத்தால் நேற்று மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன்போது குறித்த மாணவியை நீண்ட நேரம் காணாத நிலையில் இல்லத்தில் இருந்தவர்கள் அவரைத் தேடியுள்ளனர்.

விடுதியின் முதலாவது மாடியில் அமைந்துள்ள கழிவறையில் குறித்த மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி மானவடு தலைமையிலான குழுவினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post