ஆசிரியர்களுக்கான புதிய சேவை ஆரம்பம்! முதற்கட்டமாக 4,471 பேருக்கு சந்தர்ப்பம்!

ஆசிரியர்களுக்கான புதிய சேவை ஆரம்பம்! முதற்கட்டமாக 4,471 பேருக்கு சந்தர்ப்பம்!

இலங்கைக்கல்வி வரலாற்றில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த 'இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை' (Sri Lanka Teacher Advisory Service) எனும் புதியசேவை புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இப்புதிய சேவை கடந்த ஜுலை மாதம் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

கல்வித்துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட இச்சேவைக்கான அறிவித்தல் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் கடந்த ஜுலை மாதம் 01ஆம் திகதி வெளியான அதிவிசேட வர்த்தமானியில் 16 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

இலங்கை அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் எதிர்வரும் 2019.08.22 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட இலங்கை ஆசிரிய சேவைப்பிரமாணக்குறிப்பு இவ்வர்த்தமானிப் பிரகடனத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இலங்கைக் கல்வித்துறையில் இதுவரை இருந்துவரும் இலங்கை கல்வி நிருவாக சேவை,  இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை,  இலங்கை அதிபர் சேவை,  இலங்கை ஆசிரியர் சேவை என்பவற்றுக்கு அப்பால் புதிதாக இச்சேவை கல்விப்பரப்பிற்குள் உருவாக்கப்பட்டுள்ளது. 

இச்சேவைக்காக முதற்கட்டமாக 4,471 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களில் 3,188 பேர் சிங்கள மொழி மூலமும் 1,283 பேர் தமிழ் மொழி மூலமும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post