குசல் இன் விபத்து தொடர்பிலான மேலதிக விபரம் வெளியாகின!

குசல் இன் விபத்து தொடர்பிலான மேலதிக விபரம் வெளியாகின!

மோட்டார் வாகன விபத்து குற்றத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் வீரர் குசல் மெண்டிஸ் இன்று மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

விபத்து நடந்த தருணத்தில் குசல் மெண்டிஸ் குடிபோதையில் இருந்தார என்பதற்கான வைத்திய பரிசோதனையே இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடக தொடர்பாளர் எஸ்.எஸ்.பி ஜாலியா சேனரத்ன தெரிவித்துள்ளார்.


மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குசல் மெண்டிஸ் ஓட்டி வந்த கார் உடன் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இறந்தவர் பானதுரை பிரதேசத்தினை சேர்ந்த 64 வயதுடையவர்.

விபத்து நடந்த நேரத்தில் குசல் மெண்டிஸ் ஓட்டி வந்த காரில் கிரிக்கெட் வீரர் அவிஷ்க பெர்னாண்டோவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.