பூனானி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தீ விபத்து!

பூனானி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தீ விபத்து!

மட்டக்களப்பு-பூனானி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இன்று பிற்பகல் தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இராணுவத்தினரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலைய ஊழியர்களும் இணைந்து குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தீ பரவலில் எந்தவொரு நபருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.


இதேவேளை, வெள்ளவத்தை - காலி வீதி - டபிள்யூ சில்வா மாவத்தை பகுதியில் வர்த்தக தொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட தீயணைப்பு வீரரொருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த குறித்த தீயணைப்பு வீரர் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் 10 தீயணைப்பு வாகனங்களும் கல்கிஸ்ஸ-தெஹிவளை மாநகர சபையின் தீயணைப்பு வாகனமொன்றும் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிலாபம்-ஆனவிலுந்தாவ பறவைகள் சரணாலய பூமியில் இன்று தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு தீ விபத்தால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post