முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் நெருக்கடிகளுக்கு முன்னாள் அமைச்சர்களான ரிஸாட் பதியூதீனும், ரவூப் ஹக்கீமும் தீர்வை வழங்கமுடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளரும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சட்டஆலோசகருமான அலிசப்ரி தெரிவிக்கின்றார்.
காலியில் இன்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனை கூறினார்.
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு பௌத்த மக்களின் ஆசிர்வாதத்தைப் பெற்றிருக்கும் பொதுஜன முன்னணிக்கே தீர்வை வழங்கமுடியும் என்றும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.