புதிதாக அமைக்கபட்ட மன்னார் பேரூந்து நிலையம் !!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிதாக அமைக்கபட்ட மன்னார் பேரூந்து நிலையம் !!


மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் மக்களின் பாவனைக்காக உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுமார் 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் சகல வசதிகளுடன் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.




இந்த நிலையில் குறித்த பஸ் நிலையத்தில் அரச தனியார் போரூந்து சேவைகள் வைபவ ரீதியாக இடம் பெறும் வகையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் அவர்களினால் உத்தியோக பூர்வாமாக கையளிக்கப்பட்டது.





குறித்த நிகழ்வில் தனியார் போரூந்து சங்கத்தின் பிரதி நிதிகள் கலந்து கொண்ட போதும் அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பிரதி நிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை.


குறித்த பேரூந்து நிலையத்தில் தனியார் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.